பொலிஸ் கான்ஸ்டபிளின் ஏ.டி.எம். அட்டையை திருடிய பொலிஸ்

  கண்டி ஸ்ரீ தலதா மாளிகை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருக்கு சொந்தமான வங்கியொன்றின் ஏ.டி.எம். அட்டையை திருடி பணத்தை எடுத்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏ.டி.எம். அட்டையை திருடி , 105,000 ரூபாவை மீளப் பெற்று, மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக கண்டி தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

75,000 ரூபா மீட்பு

தலதா மாளிகை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

  சந்தேக நபரால்  திருடப்பட்ட ஏ.டி.எம். அட்டையை பயன்படுத்தி மீளப் பெற்றதாகக் கூறப்படும் பணத்திலிருந்து 75,000 ரூபா கண்டுபிடிக்கப்பட்டதாக கண்டி தலைமையக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கைதான சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளை கண்டி தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.