யாழில் சிறிய தந்தையால் சிறுமி துஷ்பிரயோகம்!

யாழில் சிறிய தந்தையால் 13 வயதான சிறுமியொருவர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

யாழ் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பெண்ணொருவர், இரண்டாவது தடவையாக திருமணம் செய்து கொண்டு தனது முதல் தாரத்தின் மூன்று பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்துள்ளார்.

துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய நபர்

இந்நிலையில் அப் பெண்ணின் இரண்டாவது கணவர், 13 வயதான அப்பெண்ணின் மகளை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து பொலிஸார் சிறுமியை மீட்டு வைத்திய பரிசோதனைக்காக வைத்திய சாலையில் அனுமதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleபொலிஸ் கான்ஸ்டபிளின் ஏ.டி.எம். அட்டையை திருடிய பொலிஸ்
Next articleகனடா அமைச்சரவையில் ஏற்ப்படுள்ள மாற்றம்!