புதிதாக உள்வாங்கப்படவுள்ள 20, 000 பொலிஸ் உத்தியோகத்தர்கள்

20, 000 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு  புதிதாக நியமனம் வழங்குவதற்கான  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர்  டிலான் அலஸ்  தெரிவித்துள்ளார்.

பொலிஸ் உத்தியோகத்தர்களின் பதவி விலகல், ஓய்வு ,மற்றும் இயலாமைக் குறித்தக்  காரணங்களினால்  உத்தியோகத்தர்களுக்கான பற்றாக்குறை நிலவுவதனால் புதிதாக ஆட்சேர்ப்பு இடம்பெறவுள்ளது.

  எனவே ,  எதிர்வரும் காலங்களில்  அதிகாரிகளுக்கான  பற்றாக்குறைத் தீர்க்கப்படும் எனவும் டிலான்  அலஸ்  தெரிவித்துள்ளார்.