100 கோடி ரூபா பெறுமதியான போதைப் பொருட்கள் பறிமுதல்

100 கோடி ரூபா பெறுமதியான போதைப் பொருட்களை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த போதைப்பொருளுடன் தொடர்புடைய 6 சந்தேக நபர்களையும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருளுடன் 3 சந்தேகநபர்களும், ஏனைய சந்தேகநபர்கள் புறக்கோட்டை மற்றும் வெள்ளவத்தை பகுதிகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹொங்கொங்கில் இருந்து டுபாய் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட பொதி ஒன்றை திறந்த போது, ​​போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் குறித்த போதைப்பொருளை கண்டுபிடித்துள்ளனர்.

அதன் பின்னர் கைது செய்யப்பட்ட 3 பேரிடம் நடத்திய விசாரணையில், ஏனைய சந்தேகநபர்கள் புறக்கோட்டை மற்றும் வெள்ளவத்தை பகுதிகளில் கைது செய்யப்பட்டதுடன் போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டன.

இந்த மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட 6 பேரும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதுடன் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் தடுப்புக் காவல் உத்தரவு பெற்று மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.