வசந்த முதலிகே கைது!

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் அழைப்பாளர் வசந்த முதலிகே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

2020 ஆம் ஆண்டு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது குழப்பம் ஏற்படுத்தியமை தொடர்பில் அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொரளை மயானத்திற்கு அருகில் வைத்து குருந்துவத்தை பொலிஸார், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் அழைப்பாளர் வசந்த முதலிகேயை இன்று (27) கைது செய்தமை குறிப்பிடத்தக்கது.

Previous articleகாடுகளுக்கு தீ வைத்த நபர் கைது!
Next article100 கோடி ரூபா பெறுமதியான போதைப் பொருட்கள் பறிமுதல்