காடுகளுக்கு தீ வைத்த நபர் கைது!

பதுளையில் கடந்த சில நாட்களாக இடம்பெற்ற காடுகளுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்லகெட்டுவ நாவில கீழ்பிரிவு காட்டுப்பகுதியில் சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபடுபவர்களைக் கைது செய்வதற்காக பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீ வைக்க முயற்சித்த நபர்

இதன்போது காட்டுப் பகுதிக்கு தீ வைக்க முயற்சித்த நபர் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெமோதரை பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

சந்தேகநபர் பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்பட்டபோது அவரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.