கழிப்பறைக்கு சென்ற பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

  மட்டக்களப்பு இருதயபுரத்தில் கழிப்பறைக்குச் சென்ற வயது முதிந்த பெண்ணின் தங்கச் சங்கிலியை அயல் வீட்டு இளைஞரொருவர் பறித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று (26) இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

பொலிஸ் நிலையத்தில் புகார் 

குறித்த பெண் கழிப்பறைக்கு சென்றுள்ள நிலையில் அங்கு மறைந்திருந்த குறித்த இளைஞர் அவரை தள்ளி கீழே வீழ்த்திவிட்டு அவரது தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றுள்ளார்.

சம்பவம் குறித்து பொலிஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து பொலிஸார் மேற்கொண்ட தீவிர விசாரணையில் சந்தேகநபரான இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் கொள்ளையடிக்கப்பட்ட தங்க சங்கிலியும் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கைதான இளைஞரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.