குவைத்தில் இலங்கையர் உட்ப்பட ஜவருக்கு தூக்கு தண்டனை

  குவைத் நாட்டில்  இலங்கையைசேர்ந்த போதைப்பொருள் வர்த்தகர் உட்பட ஐவருக்கு  தூக்குதண்டனையை நிறைவேற்றியுள்ளது.

அதபடி  இலங்கையை சேர்ந்த போதைப்பொருள் வர்த்தகர் 2015 இல் மசூதியொன்றின் மீதுஇடம்பெற்ற தாக்குதலின் சூத்திரதாரி உட்பட ஐந்துபேருக்கு தூக்குதண்டனையை நிறைவேற்றியுள்ளதாக குவைத் தெரிவித்துள்ளது.

மத்திய சிறைச்சாலையில் தூக்குதண்டனை

குற்றவாளிகளுக்கு  குவைத்தின் மத்திய சிறைச்சாலையில் தூக்குதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மசூதி தாக்குதலில் குற்றம்சாட்டப்பட்ட இலங்கையை சேர்ந்த போதைப்பொருள் வர்த்தகர் உட்பட ஐவருக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது எனஅதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களில் ஒருவர் எகிப்தை சேர்ந்தவர் மற்றையவர் இலங்கையை சேர்ந்தவர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.