இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு!

 கடந்த ஆண்டு அவுஸ்த்ரேலியாவில்  நடைப்பெற்ற  20 க்கு 20  உலகக் கிண்ணப் போட்டியின் போது இலங்கை கிரிக்கட் நிறுவனம் முரைக்கேடாக நிதியைப் பயன்படுத்தியதாக  குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு  இலங்கை கிரிக்கட் நிறுவனத்திற்கு முன்னால் சிறிய குழுவினரால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.  

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்  ஹேஷா விதானகே  நிதி முறைகேடுகளுக்கு எதிராக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு  செய்துள்ளமையே இதன் பின்புலமாகக் காணப்படுகின்றது என தகவலறியப்பட்டுள்ளது.