இலங்கை வரும் ஜப்பான் வெளிவிவகார அமைச்சர்

ப்பான் வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யோஷிமாசா இரு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இன்று வெள்ளிக்கிழமை (28) இரவு இலங்கை வருகிறார்.

இலங்கையுடன் தற்போதுள்ள இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யோஷிமாசாவின் விஜயம் அமையவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.