மோட்டர் சைக்கிள் விபத்தில் இரு மாணவர்கள் உயிரிழப்பு!

புத்தளம் மாவட்டத்தில் மாதம்பே பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் இரண்டு பாடசாலை மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்து இன்று வெள்ளிக்கிழமை (28)  காலை இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த மாணவர்கள் இருவரும் தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் பயணித்த போதே விபத்து இடம்பெற்றுள்ளது.