கொழும்பில் பேரணிகளை நடாத்த தடை உத்தரவு!

  கொழும்பு சில பகுதிகளில் ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணிகளை நடத்த நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி தொழிலாளர் போராட்ட மத்திய நிலையத்தின் செயலாளர் துமிந்த நாகமுவ உள்ளிட்ட சிலருக்கு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் இந்தத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இன்று காலை 10.30 முதல் நாளை முற்பகல் 10 மணி வரை இந்த தடையுத்தரவு அமுலில் உள்ளது.

இந்த நிலையில் தேசிய வைத்தியசாலையின் பண்டாரநாயக்க கட்டடம், அவசர சிகிச்சைப் பிரிவு, அவசர விபத்து பிரிவு, கண் வைத்தியசாலை, சுகாதார அமைச்சுக்கு முன்பாக உள்ள நடைபாதைகளை பயன்படுத்த முடியாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.