வவுனியா வாள்வெட்டு தாக்குதல் குறித்து வெளிவரும் பல அதிர்ச்சி தகவல்கள்

வவுனியாவில் வாள்வெட்டுக்கு இலக்காகி 21 வயது பாத்திமாவும் அவரது கணவர் சுகந்தனும் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியிருந்த நிலையில் உயிரிழந்த சுகந்தன் தொடர்பில் தற்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உயிரிழந்த சுகந்தன் கட்டைப்பஞ்சாயத்து நடத்தி வந்தவர் என கூறப்படுவதுடன் அது தொடபிலான காணொளியும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கட்டைப்பஞ்சாயத்து – அடிதடி
கடந்த ஞாயிற்றுக்கிழமை (23) அதிகாலை வவுனியா, தோணிக்கல் பகுதியில் உள்ள வீடொன்றினுள் நுழைந்த 10 பேர் கொண்ட குழு, வீட்டில் இருந்தவர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல் ஈநடத்தியதுடன், வீட்டுக்கும் பெற்றோல் ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றது.

இந்த சம்பவத்தில் சுகந்தனின் மனைவி பாத்திமா சம்பவ இடத்தில் உயிரிழந்த நிலையில் , வாள்வெட்டு தாக்குதலுக்குள்ளான சுகந்தன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் புதன்கிழமை (26) உயிரிழந்திருந்தார்.

இந்நிலையில் சுகந்தன் கட்டைப்பஞ்சாயத்து நடத்தி வந்ததாக கூறப்படும் நிலையில் நபர் ஒருவரை கட்டிவைத்து தாக்கும் காணொளியும் வெளியாகி பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.