கணவரால் கொல்லப்பட்ட 50 வயது பெண்!

  பதுளை, ரிதிமாலியத்த பிரதேசத்தில் 50 வயதுடைய பெண்ணொருவர் கணவரால் கொலை செய்யப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன் மனைவியின் சடலத்தை மகனின் உதவியுடன் சடலம் தோட்டத்தில் புதைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பில் பெண்ணின் கணவர் மற்றும் மூத்த மகன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மனைவி காணாமல்போனதாக நாடகம்

உயிரிழந்த பெண் கடந்த 2021ஆம் ஆண்டு முதல் காணாமல் போயுள்ளதாக சந்தேகநபர்கள் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய, சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய பெண் கொலை செய்யப்பட்டமை அம்பலமாகியுள்ளது.

தந்தை , மகன் மற்றும் தாய்க்கு இடையில் வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சந்தேகநபரான கணவர் மனைவியை தாக்கிவிட்டு பின்னர் மூத்த மகனின் உதவியுடன் சடலத்தை தோட்டத்தில் புதைத்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பெண்ணின் 70 வயது கணவர் மற்றும் அவர்களது 26 வயதான மூத்த மகனும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.