இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் அதிகரிக்கும்

எதிர்வரும் மாதம் 15ஆம் திகதி முதல் டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மீண்டும் அதிகரிக்கும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

வழங்கல் மற்றும் தேவைக்கு ஏற்ப டொலர் வீதத்தை தீர்மானிக்க அரசாங்கம் அனுமதித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சமீபகாலமாக ரூபாய் மதிப்பில் ஏற்பட்டுள்ள ஏற்ற இறக்கத்திற்கு முற்றிலும் டொலர் பரிவர்தனியே காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த மூன்று நாட்களில் ரூபாய் மதிப்பு மீண்டும் உயர்ந்துள்ளது என்றும் கடன் மறுசீரமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்தவுடன், ரூபாயின் மதிப்பு மீள அதிகரிக்கும் என தெரிவித்தார்.

உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் இருந்து இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான தொடர்ச்சியான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருவதாக ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

Previous articleயாழில் பட்டப்பகலில் நிகழ இருந்த கொடூரம்!
Next articleகணவரால் கொல்லப்பட்ட 50 வயது பெண்!