இந்திய கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள்!

இந்திய (India) கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த 14 இலங்கை கடற்றொழிலாளர்கள் (Sri lanka Fisherman) கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நாகப்பட்டினம் – கோடியக்கரைப் பகுதியில் வைத்து குறித்த கடற்றொழிலாளர்கள் நேற்று (16) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கைது செய்யப்பட்டவர்களின் 5 படகுகளையும் இந்திய கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

கடற்படை அதிகாரிகள் விசாரணை
இந்தநிலையில் குறித்த இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை அவர்களிடம் இந்திய கடற்படை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்றைய தினம் அவர்களது 5 படகுகளையும் நாகை கடலோர பாதுகாப்பு குழும காவல்துறையினரிடம் இந்திய கடற்படை அதிகாரிகள் ஒப்படைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.