யாழில் சோகத்தில் ஆழ்த்திய பட்டதாரி மாணவியின் முடிவு!

யாழ்ப்பாணத்தில் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு வீடு திரும்பிய இளம் பெண்ணொருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் (28-07-2023)இரவு வட்டுக்கோட்டை – சுழிபுரம் மத்தி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இச்ச்சம்பவம், சுழிபுரம் மத்தி பகுதியைச் சேர்ந்த 26 வயதான சற்குணரத்தினம் கௌசி என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இளம் யுவதியின் உயிரிழப்பு தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த யுவதி சப்ரமுகவ பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் (27) பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

இந்நிலையில் பட்டமளிப்பு விழா முடிந்து நேற்றையதினம் பெற்றோருடன் அவர் சுழிபுரத்தில் உள்ள வீட்டுக்கு வந்தார்.

இவ்வாறான நிலையில், நேற்றிரவு தந்தை வெளியில் சென்ற நிலையில், தாயார் வீட்டு வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளை குறித்த யுவதி தூக்கில் தொங்கியுள்ளார்.

இதனை அவதானித்த தாயார் அவரை மீட்டு சங்கானை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து சம்பவம் தொடர்பில் மரண விசாரணைகளை மேற்கொண்ட திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் அவர்கள்,

உடற்கூற்று பரிசோதனைக்காக யுவதியின் சடலத்தை யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தார். உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

தாய் மற்றும் தந்தை ஆகியோர் தங்களுக்குள் தொடர்ந்து முரண்பட்டு வரும் நிலையில் மன விரக்தி அடைந்த யுவதி தற்கொலை செய்துக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleஇன்றைய ராசிபலன்30.07.2023
Next articleநாட்டில் உள்ள பட்டதாரிகளுக்கான முக்கிய அறிவிப்பு!