நாட்டில் உள்ள பட்டதாரிகளுக்கான முக்கிய அறிவிப்பு!

புதிய பட்டதாரிகளை இணைத்துக்கொள்வது தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகள் மாகாண மட்டத்தில் மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

களுத்துறையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், விஞ்ஞானம், தொழிநுட்பம், ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகள் ஆகிய பாடங்களுக்கு புதிய பட்டதாரிகளை இணைத்துக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதேவேளை, நீதிமன்றத்தின் தடை உத்தரவு காரணமாக ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களை இணைப்பது தாமதமாகும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேலும் தெரிவித்துள்ளார்.

Previous articleயாழில் சோகத்தில் ஆழ்த்திய பட்டதாரி மாணவியின் முடிவு!
Next articleஉலக தலைவர்களின் ஆதரவை பெறுவது ஒரு வகை கலை-மைத்திரிபால சிறிசேன