சாரதியின் நித்திரை கலக்கத்தால் நிகழ்ந்த விபத்து!

இரத்தினபுரியில் தனியார் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 14 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி, எம்பிலிபிட்டிய வீதியின் கலஹிட்டிய பிரதேசத்தில் இன்று (30) காலை இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடம்பெற்ற விபத்து

கொழும்பில் இருந்து மொனராகலை நோக்கி பயணித்த பேருந்து இன்று காலை 5 மற்றும் 6 மணிக்கு இடையில் வீதியில் கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கமே விபத்துக்குக் காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Previous articleஉலக தலைவர்களின் ஆதரவை பெறுவது ஒரு வகை கலை-மைத்திரிபால சிறிசேன
Next articleமட்டக்களப்பு – வாழைச்சேனையில் பதற்றம் ஆறு வயது சிறுவன் உயிரிழப்பு!