மட்டக்களப்பு – வாழைச்சேனையில் பதற்றம் ஆறு வயது சிறுவன் உயிரிழப்பு!

மட்டக்களப்பு – வாழைச்சேனை ரிதிதென்ன பிரதேசத்தில் குடிபோதையில் சாரதி செலுத்திய பௌசரில் மோதுண்டு 6 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.

நேற்று இரவு இடம்பெற்ற இந்த விபத்தின் பின்னர் குறித்த பௌசருக்கு பிரதேசவாசிகள் தீ வைத்துள்ளமையினால் பதற்றமான சூழல் ஒன்று ஏற்பட்டுள்ளது.

இந்த பௌசரின் சாரதியும் உதவியாளரும் மதுபோதையில் வாகனத்தை ஓட்டிச் சென்ற போது, ​​சைக்கிளில் வந்த சிறுவனை அவரது மூத்த சகோதரரையும் மோதியுள்ளனர்.

வாழைச்சேனையில் பதற்றம்

பின்னர், பௌசரின் சாரதியும் உதவியாளரும் அங்கிருந்து தப்பி சென்ற நிலையில் பிரதேசவாசிகள் அவர்களைப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

விபத்தின் பின்னர், பொலிஸாரின் தலையீட்டினால் பிரதேசத்தில் நிலவிய பதற்றமான சூழ்நிலைக்கு தீர்வு காணப்பட்டதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Previous articleசாரதியின் நித்திரை கலக்கத்தால் நிகழ்ந்த விபத்து!
Next articleஉலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு!