வாகன சாரதிகளுக்கான விசேட அறிவித்தல்!

வரலாற்றுச் சிறப்புமிக்க கெட்டபெரு எசல ரந்தோலி பெரஹெரா காரணமாக தெனியா அக்குரஸ்ஸ பிரதான வீதியை பயன்படுத்தும் சாரதிகளுக்கு பொலிஸார் விசேட அறிவித்தல் விடுத்துள்ளனர்.

குறித்த பெரஹெரா நாளை (01) பிற்பகல் 01.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை வீதி உலா நடைபெறுவதால் அவ்வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்படக்கூடும் என பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்படி, குறித்த வீதியைப் பயன்படுத்தும் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.

அக்குரஸ்ஸயில் இருந்து தெனியாய நோக்கி செல்வோர் பிட்டபெத்தர சந்தியில் பஸ்கொட வீதியில் பஸ்கொடவிற்கு பிரவேசித்து மாத்தறை கொட்டபொல வீதியில் ஊருபொக்க ஊடாக பெரலபனாதர நகருக்கு வந்து தலபலாகந்த வீதியின் ஊடாக தெனியாய 51 ஆவது சந்திக்கு பிரவேசித்து தெனியாய நகரிற்கு பயணிக்க முடியும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.
 

Previous articleபொருளாதார நெருக்கடியால் இலங்கையை சேர்ந்த நால்வர் தமிழகத்தில் தஞ்சம்
Next articleபாடசாலை மாணவர்கள் எதிர்கொள்ளும் ஆபத்து!