நீரில் மூழ்கிய 12 வயது சிறுவன் உயிரிழப்பு!

நொச்சியாகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கலா ஓயில் நீராடச் சென்ற சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

நேற்று மாலை (01) சிறுவன் நீரில் மூழ்கி ஆபத்தான நிலையில் நொச்சியாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சாலியவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 12 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த சிறுவன் சில நண்பர்களுடன் கலாஓயாவிற்கு அருகில் உள்ள தேவாலயத்திற்கு செல்வதாக பெற்றோருக்கு தெரிவித்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

பின்னர் சிறுவன் கலாஓயில் நீராடச் சென்ற போதே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Previous articleஜனாதிபதி வெளியிட்டுள்ள விசேட வர்த்தமானி
Next articleஉலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை அதிகரிப்பு!