போலி ஆவணங்களை சமர்ப்பித்து இத்தாலி செல்ல முயன்ற யாழ் தம்பதியினர் கைது!

இத்தாலிக்குச் செல்ல முயன்ற யாழ்ப்பாண இளம் தம்பதியினர் குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (01) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி  இத்தாலிக்கு   சட்டவிரோதமாக  அவர்கள் செல்லமுயன்றநிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில்  யாழ்ப்பாணம், சங்கானைப் பிரதேசத்தில் வசிக்கும் இளம் தம்பதியினரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

போலி இத்தாலி வீசா

இவர்கள் மீது ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் இவர்களின் பயணப்பொதிகளை சோதனையிட்டபோது, பொய்யான தகவல்களுடன் தயாரிக்கப்பட்ட இரண்டு கடவுச்சீட்டுகளும் போலி வீசாவும் இந்த இளைஞனிடம் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து யுவதியை சோதனைக்கு உட்படுத்தியபோது அவரது உள்ளாடைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த போலி இத்தாலி வீசா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட தம்பதியினர் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக  மேலும் தெரிவிக்கபப்டுகின்றது.

அதேவேளை  இலங்கை வாழ் தமிழர்கள்  பலரும் வெளிநாட்டு  மோகத்தால்  சட்டவிரோத பயணங்களை மேற்கொண்டுவருகின்ற  நிலையில் அதில் உள்ள ஆபத்தினை பலரும் உணர்வதில்லை.

கடந்த காலங்களில்  இவ்வாறு சட்டவிரோதமாக  ஐரோப்பிய மற்று கனடாவுக்கு செல்ல முயன்றவர்கள் தொடர்பில்  பல  வேதனையான விடயங்கள்  வெளியாகி இருந்த்துடன்  உயிர்பலிகளும்  ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous articleபிரான்ஸ் தமிழர் பகுதியில் பரபரப்பு!
Next articleயாழில் வீட்டை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டவர் கைது!