யாழில் வீட்டை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டவர் கைது!

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சில தினங்களுக்கு முன் வீடொன்றை உடைத்து தங்க நகைகளை திருடிய   நபரொருவர் நேற்றையதினம்  செவ்வாய்க்கிழமை (01) கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 30ஆம் திகதி  யாழ். நகர்ப் பகுதியை அண்டிய  வீடொன்றினை உடைத்து, வீட்டில் இருந்த சுமார் 2 இலட்சத்து 75ஆயிரம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் திருடப்பட்டிருந்தன.

பொலிஸார் விசாரணை

 திருட்டு  சம்பவம் தொடர்பில் உரிமையாளரால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவந்த நிலையில், இந்த திருட்டோடு சம்பந்தப்பட்ட நபரொருவரை நேற்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில்  கைதான நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.