மீண்டும் அதிகரிக்கும் மின்கட்டணம்!

மீண்டும் மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபை, பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் அனுமதி கோரியுள்ளது.

இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கடந்த மாதம் 21 ஆம் திகதி முன்வைத்துள்ள யோசனையில், மின்சார கட்டணத்தை மீண்டும் அதிகரிப்பதற்கு அனுமதி கோரப்பட்டுள்ளது.

மீண்டும் கட்டணம் அதிகரிப்பு

மின்சார கட்டணத்தை 15 வீதத்தால் குறைப்பதற்கான தீர்மானம் நடைமுறைப்படுத்தப்பட்டு சில நாட்கள் மாத்திரம் கடந்துள்ள நிலையில் மீண்டும் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அனுமதி கோரப்பட்டுள்ளது.

இதேவேளை அண்மையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது தொடர் மின்சார விநியோகத்திற்கான திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.  

Previous articleமன்னாரில் கரையொதுங்கிய சடலம் தொடர்பில் பொது மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!
Next articleமக்கள் வங்கியின் விசேட அறிவிப்பு!