மக்கள் வங்கியின் விசேட அறிவிப்பு!

இன்றும், நாளையும் மக்கள் வங்கியின் கிளைகள் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் தெரிவு செய்யப்பட்ட கிளைகளே திறக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

அஸ்வெசும திட்டத்திற்கான வங்கி கணக்கு

இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அஸ்வெசும நலன்புரி திட்டத்திற்காக வங்கிக் கணக்குகளை விரைவாக திறக்குமாறு அரசாங்கத்தால் மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே அஸ்வெசும திட்டத்திற்கான கணக்குகளை திறப்பதற்காக குறித்த இரு நாட்களும் தெரிவு செய்யப்பட்ட வங்கிக்கிளைகள் திறந்திருக்கும் என்ற அறிவிப்பு மக்கள் வங்கியின் முகப்புத்தக பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. 

Previous articleமீண்டும் அதிகரிக்கும் மின்கட்டணம்!
Next articleஇன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் காயம்!