இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் காயம்!

கம்பஹா, வெலிவேரிய பகுதியில் இன்று சனிக்கழமை (05) காலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச்சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

வெலிவேரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எம்பரலுவ வீதி, ஜூப்லி மாவத்தை பகுதியில் காரில் பயணித்து கொண்டிருந்த நபர் ஒருவர் மீது மோட்டார் சைக்கிளில் வருகை தந்த அடையாளந்தெரியாத இருவரினால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சந்தேகநபர்கள் மோட்டார் சைக்கிளை அதே இடத்தில் விட்டு சென்றுள்ளதுடன், அவர்கள் இருவரும் லொறியொன்றில் தப்பிச் சென்றுள்ளனர்.

இதன் போது, காயமடைந்த நபர் உடுகம்பொல, மாதெல்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் அவர் கம்பஹா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கி பிரயோகத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை. சம்பவம் தொடர்பில் வெலிவேரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Previous articleமக்கள் வங்கியின் விசேட அறிவிப்பு!
Next articleவர்த்தமானி அறிவித்தலை மீள பெற கோரி போராட்டம்!