வர்த்தமானி அறிவித்தலை மீள பெற கோரி போராட்டம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று சனிக்கிழமை (05)  சுழிபுரத்தில் போராட்டம் இடம்பெற்றது.

போராட்டத்தை தொடர்ந்து சுழிபுரம் சந்தியில் இருந்து பாறளை முருகன் ஆலயத்தை நோக்கி பேரணி இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் – சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்தில் உள்ள அரச மரத்தை சங்கமித்தை நாட்டிய மரம் என  வெளியிடப்பட்ட அரச வர்த்தமானி மீளப்பெறப்படவேண்டும் என தெரிவித்தே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

போராட்டத்தின் போது தொல்லியல் திணைக்களத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டதுடன் பதாகைகளையும் போராட்டகாரர்கள் தாங்கியிருந்தனர்.

போராட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள், மத குருமார்கள், சைவ அமைப்புக்கள், சிவில் அமைப்புகள், மக்கள் பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Previous articleஇன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் காயம்!
Next articleமலை உச்சியில் பெண்ணின் சடலம் மீட்பு!