அடையாளம் காணப்படாத சடலம் ஒன்று மீட்பு!

ராகம ரயில் நிலையத்திற்கு அருகில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

நேற்று (05)  இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமானது 65 முதல் 75 வயதுக்கு இடைப்பட்ட ஆண் ஒருவருடையது எனவும், சுமார் 06 அடி 02 அங்குல உயரமும், மெல்லிய உடலும், வெள்ளை முடியும், நடுவில் வழுக்கையும், மீசையும்  தாடியும் வளர்த்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இறந்தவர் வெள்ளை, வெளிர் சாம்பல் நிற சட்டை மற்றும் சாம்பல் நிற காற்சட்டையும் அணிந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous articleதொலைபேசி கம்பிகளை திருடிய இருவர் கைது
Next articleவானிலை தொடர்பான அறிவிப்பு!