கொழும்பில் இடம்பெற்ற வாகன விபத்தில் தாயும் மகனும் உயிரிழப்பு!

கொழும்பில் இடம் பெற்ற வாகன விபத்தில் தாயும் மகனும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் கொழும்பு – மகரகம பிரதேசத்தில் நேற்று (05) இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு தந்தை படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.

பாரவூர்தி ஒன்றும், கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் காரில் சென்றவர்கள் பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்கள்
காரைச் செலுத்திச் சென்ற 27 வயதுடைய இளம் பொறியியலாளரும், முன் ஆசனத்தில் அமர்ந்து சென்ற 55 வயதுடைய அவரின் தாயாரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரின் பின் ஆசனத்தில் அமர்ந்து சென்ற 58 வயதுடைய தந்தை படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விபத்தில் பாரவூர்தியின் சாரதியைக் கைது செய்துள்ள பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleசொக்கிலேட்டில் மனித விரல்!
Next articleகல்வி அமைச்சு மேற்கொண்டுள்ள விசேட தீர்மானம்!