சொக்கிலேட்டில் மனித விரல்!

மஹியங்கனை வைத்தியசாலையில் பணிபுரியும் உத்தியோகத்தர் ஒருவர் உணவகம் ஒன்றில் இருந்து கொள்வனவு செய்த சொக்லேட் ஒன்றில் மனித விரலின் ஒரு பகுதியை கண்டெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் நேற்று (05) இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து அவர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை மஹியங்கனை நீதவான் நீதிமன்றத்தில் உண்மைகளை அறிக்கையிட்டு சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளனர்.

மேலும் மஹியங்கனை சுகாதார வைத்திய அதிகாரி சஹன சமரவீரவின் ஆலோசனையின் பேரில் பொது சுகாதார பரிசோதகர் சர்மிந்த ரத்நாயக்க மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் குழு இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleகொழும்பு விபச்சார விடுதியில் ஆறு பேர் கைது!
Next articleகொழும்பில் இடம்பெற்ற வாகன விபத்தில் தாயும் மகனும் உயிரிழப்பு!