கொழும்பு விபச்சார விடுதியில் ஆறு பேர் கைது!

இரத்மலானை பிரதேசத்தில் ஆயுர்வேத ஸ்பா என்ற போர்வையில் இயங்கி வந்த இரண்டு விபச்சார விடுதிகளில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் ஒருவர் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கல்கிசை குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளினால் நேற்று இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஒரு விபச்சார விடுதியில் இருந்து மூன்று பெண்களும், மற்றொன்றில் இருந்து ஒரு ஆணும் இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

23 மற்றும் 49 வயதுடைய சந்தேகநபர்கள் இன்று கல்கிசை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.  

Previous articleதிருடிய நகைகளை விழுங்கிய நபர் வைத்தியசாலையில் அனுமதி!
Next articleசொக்கிலேட்டில் மனித விரல்!