திருடிய நகைகளை விழுங்கிய நபர் வைத்தியசாலையில் அனுமதி!

கம்பஹாவில் திருடிய நகையை நபர் ஒருவர் விழுங்கிய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கம்பஹா, ஒருத்தோட்டை வீதியில் பயணித்த பெண்ணிடமே இவ்வாறு நகையை திருடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நபரிடம் விசாரணை நடத்தும் போதே அதனை விழுங்கியதாக யக்கல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விசாரணையில் தெரிய வந்தவை

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பெண்களின் தங்க நகையை அருத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் போது சுற்றி வளைத்தவர்கள் வந்ததையடுத்து சாரதி தப்பியோடிய நிலையில் நகையை வைத்திருந்த கொள்ளையன் அதனை விழுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் யக்கல பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் அதுல கமகேவின் பணிப்புரையின் பேரில் பொலிஸ் பரிசோதகர் சரத் பண்டார உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் அந்த நகையை வெளியில் எடுத்து சந்தேக நபரை கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Previous articleவானிலை தொடர்பான அறிவிப்பு!
Next articleகொழும்பு விபச்சார விடுதியில் ஆறு பேர் கைது!