நெல்லுக்கு விலை நிர்ணயிக்கப்படாமையால் கவலை வெளியிட்டுள்ள விவசாயிகள்

திருகோணமலை,கிண்ணியா பிரதேச செயலக பகுதிக்குட்பட்ட கரைச்சல் திடல் விவசாய நிலப் பகுதியில் நெல் அறுவடை தற்போது இடம் பெற்று வருகின்றது.  

இருந்த போதிலும் இம் முறை சிறுபோகச் செய்கை அறுவடையில் பாரிய நஷ்டங்களை எதிர்நோக்கியுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

இப் பகுதியில் சுமார் 350 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்களில் நெற் செய்கை மேற்கொள்ளப்பட்டு அறுவடை இடம்பெற்று வருகின்றது. 

தங்களுக்கான நெல் கொள்வனவில் நிர்ணய விலை இன்மை, வெட்டுக் கூலி அதிகம் விளைச்சல் குறைவு என பல பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். 

தனியார் உரிமையாளர்டளே நெல்லை கொள்வனவு செய்கின்றனர் நிர்ணய விலை இன்மையால் பாரிய நஷ்டம் இலாபமற்ற அறுவடை எஞ்சியுள்ளதாகவும் அரசாங்கம் இதற்கு சாதகமான பதில்களை விவசாயிகளுக்கு வழங்கி நிர்ணய விலையை அறிவிக்க வேண்டும் .

ஒரு ஏக்கருக்கு 15 தொடக்கம் 20 ஏக்கர் வரையே விளைச்சல் கிடைத்துள்ளது. எல்லாக் கூலிகளும் போக எஞ்சியிருப்பது ஒன்றுமில்லை.

நெல்லின் விலை ஒரு மூடை சாதாரணமாக 5000 ரூபா வரையே செல்கிறது இதற்காக அரசாங்கம் சரியான பதிலை தர வேண்டும்  விவசாயத்தை நம்பியே நாங்கள் வாழ்கின்றோம் . எனவும் தெரிவிக்கின்றனர்.

அரக்கொட்டியான் அடித்து ஒரு வகை மஞ்சல் நோய் தாக்கம் ஏற்பட்டதாளும் விளைச்சல் குறைவு .அரசாங்க களஞ்சியசாலை பாலடைந்து காணப்படுகிறது எனவே நிர்ணய விலையை பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.