யாழில் வைத்தியசாலைக்கு செல்ல பஸ்ஸிற்கு காத்திருந்த பெண்ணிற்கு நிகழ்ந்த சோகம்!

யாழ்ப்பாணம், சாவகச்சேரி வைத்தியசாலைக்கு செல்ல இருந்த குடும்பப்பெண் ஒருவர் மீது மரம் முறிந்து விழுந்ததில் அவர் சனிக்கிழமை (05) உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த பெண் கடந்த ஜூலை 20ஆம் திகதி மீசாலை பகுதியில் இருந்து சாவகச்சேரி வைத்தியசாலைக்கு செல்வதற்காக பேருந்துக்காக காத்திருந்தார்.

இதன்போது வவுனியாவில் இருந்து வந்த கார் ஒன்று துவிச்சக்கர வண்டியில் பயணித்த முதியவர் ஒருவர் மீது மோதி, அதன்பின்னர் அருகில் நின்ற மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தின் போது முறிந்த மரமானது அங்கு பேருந்துக்காக காத்திருந்த பெண்மணியின் மீது விழுந்தது.

இந்நிலையில் படுகாயமடைந்த அவர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை (06) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மீசாலை கிழக்கு, மீசாலை பகுதியை சேர்ந்த மகேஷ்வரன் நவரஞ்சிதம் (வயது 56) என்ற நான்கு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சாரதியின் தூக்க கலக்கமே விபத்துக்கான காரணம் என தெரிவிக்கப்படுகிறது. அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார்.

Previous articleமனைவியை ஆயுதத்தால் தாக்கிய பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!
Next articleரணில் விக்ரமசிங்கவால் இலங்கையர்களுக்கு கிடைத்துள்ள அதிஷ்டம்