மனைவியை ஆயுதத்தால் தாக்கிய பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

காலி – போத்தல பிரதேசத்தில் தனது மனைவியை ஆயுதத்தால் தாக்கி படுகாயப்படுத்திய குற்றச்சாட்டில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டு பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விசேட பணியகத்தின் காலி பிரிவில் கடமையாற்றும் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு பணி இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

இருவருக்குமிடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தையடுத்து இந்த கான்ஸ்டபிள் தனது மனைவியை ஆயுதத்தால் தாக்கி பலத்த காயங்களை ஏற்படுத்தியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Previous articleஇன்றைய நாணய மாற்று வீதத்தின் படி
Next articleயாழில் வைத்தியசாலைக்கு செல்ல பஸ்ஸிற்கு காத்திருந்த பெண்ணிற்கு நிகழ்ந்த சோகம்!