யாழில் இரண்டு வாள்களுடன் கைதான இளைஞர்

யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் இரண்டு வாள்களுடன் இளைஞர் ஒருவர் நேற்றைய தினம் (06.08.2023) பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து கோண்டாவில் புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள வீடொன்றில் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த இரண்டு வாள்களும் மீட்கப்பட்டன.

இதனையடுத்து குறித்த வீட்டில் வசித்து வரும் இளைஞனைக் கைது செய்த பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Previous articleமாணவனை பாலியல் துஷ்ப்பிரயோகத்திற்கு உட்ப்படுத்திய ஆசிரியர் பொலிசில் சரண்
Next articleகவனக்குறைவால் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலி… தீவிர சிகிச்சைப் பிரிவில் மற்றொருவர்!