கவனக்குறைவால் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலி… தீவிர சிகிச்சைப் பிரிவில் மற்றொருவர்!

 புத்தளம் – மதுரங்குளி நகருக்கு அருகில் பயணித்த லொறியொன்று மோட்டார் சைக்கிள் மீது மோதப்பெற்று விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் இருவர் படுகாயமடைந்த புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் லொறியுடன் மோதி  விபத்து

உயிரிழந்தவர் புத்தளம் ஜயபிம பகுதியைச் சேர்ந்த சுரேந்திர அனுருத்திக 26 வயதுடைய என்ற இளைஞன் என தகவலறியப்பட்டுள்ளது.

படுகாயமடைந்து வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் இளைஞன் சாலியவெவ பிரதேசத்தைச் சார்ந்தவராவார்.

விபத்தில் உயிரிழந்த இளைஞன் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் புத்தளம் திசை நோக்கி பயணித்த போது எதிர்திசையில் கவனக்குறைவாக பயணித்த லொறியொன்று முந்திச் செல்ல தயாரான போது மோட்டார் சைக்கிள் லொறியுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த லொறி மரக்கறிகளை ஏற்றிக்கொண்டு கொழும்பு திசை நோக்கி சென்று கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் படுகாயமடைந்த இரு இளைஞர்களும் உடனடியாக சிகிச்சைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

லொறியின் சாரதி மதுரங்குளி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Previous articleயாழில் இரண்டு வாள்களுடன் கைதான இளைஞர்
Next articleஅடுத்த பத்து வருடங்களுக்கு நாட்டின் ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க அவர்களே