அடுத்த பத்து வருடங்களுக்கு நாட்டின் ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க அவர்களே

  அடுத்த 10 வருடங்களுக்கு நாட்டின் ஜனாதிபதியாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்கவே செயற்படுவார் என சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.

கொத்மலை பகுதியில் நேற்று (06) நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

சஜித்தால் முடியாது

சஜித் பிரேமதாஸவுக்கு அதிகமானோர் ஜனாதிபதித் தேர்தலின்போது வாக்களித்திருந்தனர். எனினும், அவரால் ஜனாதிபதியாக வர முடியவில்லை. பிரதமர் பதவியைக் கூடப் பெறுவதற்கு அவர் தயக்கம் காட்டினார்.

அதேசமயம் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் நாடாளுமன்றில் ஒருவர் மாத்திரமே இருந்தார். அவரால் நாட்டின் ஜனாதிபதியாக இருக்க முடிந்துள்ளதாகவும் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.

எனவே, அடுத்த 10 வருடங்களுக்கு நாட்டின் ஜனாதிபதியாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்கவே செயற்படுவார் என்றும் ஆளுநர் நவீன் திஸாநாயக்க நம்பிக்கை வெளியிட்டார். 

Previous articleகவனக்குறைவால் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலி… தீவிர சிகிச்சைப் பிரிவில் மற்றொருவர்!
Next articleமேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாகசஞ்சீவ மொராயஸ் நியமனம்