யாழில் பேருந்திற்கு கல் எறிந்த பெண் கைது!

யாழ்ப்பாணத்தில் பேருந்துக்கு கல்லெறிந்து சேதப்படுத்திய குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுப்பிட்டி பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்தை சேதப்படுத்திய பெண்
யாழ்ப்பாணம் – அச்சுவேலி இடையே சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்தொன்று இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாண நகர்ப் பகுதியில் தரித்து நின்றுள்ளது.

இதன்போது அங்கு நின்ற பெண்ணொருவர் பேருந்து மீது கல் வீசி தாக்கி பேருந்தை சேதப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் யாழ்ப்பாணம் பொலிஸார் குறித்த பெண்ணை கைது செய்துள்ளதுடன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleபாடசாலை மாணவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு!
Next articleயாழ் மக்களை ஏமாற்றும் வெளிமாவட்ட வியாபாரிகள்