பாடசாலை மாணவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

மஹாஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நேமிகே ஏரியில் மீன்பிடிக்கச் சென்ற சிலரில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று (07) காலை பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மஹாவெல் கிராமம், பொல்லே பத்த பிரதேசத்தில் வசிக்கும் 16 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த சிறுவன் மேலும் சிலருடன் நேமிகே ஏரியில் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில்,   நீரில் மூழ்கிய ஒருவரை  காப்பாற்ற உயிரிழந்த மாணவன் முற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, குறித்த மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக  அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.

பின்னர், சிறுவனுடன் வந்தவர்கள் அவரின் சடலத்மை மீட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹாஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleமோட்டார் சைக்கிளில் சென்ற காதலர்களுக்கு நேர்ந்த சோகம்!
Next articleயாழில் பேருந்திற்கு கல் எறிந்த பெண் கைது!