சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் சார்ஜன்ட்க்கு விளக்கமறியல்

மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் 16 வயது சிறுவன் ஒருவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஓய்வு பெற்ற பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரை எதிர்வரும் 18ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாற ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று திங்கட்கிழமை (07) உத்தரவிட்டார்.

சம்பவதினமான கடந்த சனிக்கிழமை பள்ளிவாசலுக்குச் சென்ற சிறுவன் ஒருவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் சார்ஜன்டை பொதுமக்கள் மடக்கி பிடித்து நையப்புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

ஏறாவூர் பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதுடைய பொலிஸ் சார்ஜன்ட் ஏற்கனவே கடமையாற்றி வந்தகாலங்களில் இவ்வாறன சம்பவங்கள் தொடர்பாக வெளிமாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடமையாற்றி வந்த நிலையில் அண்மையில் ஓய்வு பெற்றவர் எனவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

இதில் கைது செய்யப்பட்ட பொலிஸ் சார்ஜன்டை நேற்றைய தினம் ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை எதிர்வரும் 18 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

Previous articleயாழ் மக்களை ஏமாற்றும் வெளிமாவட்ட வியாபாரிகள்
Next articleதாய் மகளுடன் தகாத உறவில் ஈடுபட்ட தேரேர் கைது!