தாய் மகளுடன் தகாத உறவில் ஈடுபட்ட தேரேர் கைது!

நவகமுவவில் பல்லேகம சுமன என்ற பிக்கு கைது செய்யப்பட்டுள்ளதாக நவகமுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நவகமுவ, பொமிரிய ரஸ்ஸபான பிரதேசத்தில் விஹாரைக்க சொந்தமானது எனக் கூறப்படும் வீட்டை நடத்தி வந்ததோடு இன்று (08) அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதேசத்தில் சில பெண்களுடன் தகாத செயல்களில் ஈடுபட்டதாக பிரதேசவாசிகளிடம் இருந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது.

பதிவு செய்யப்பட்ட சாட்சியங்கள்

இதன் அடிப்படையில் பிக்குவை பொலிஸாருக்கு அழைத்து சாட்சியங்களை பதிவு செய்து கைது செய்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று (08) கடுவெல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேரர், தாய், மகள் எனக் கூறப்படும் இரண்டு பெண்களுடன் அந்த அறையில் நிர்வாணமாக இருந்த வேளையில் பிரதேசவாசிகளால் சுற்றிவளைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தினர் என்றக் குற்றச்சாட்டில் எட்டுப் பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Previous articleசிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் சார்ஜன்ட்க்கு விளக்கமறியல்
Next articleஉயர் கல்விச் செலவிற்காக விபச்சாரத்தில் ஈடுபட்ட 18 பேர் கைது!