யாழ் மாவட்டத்தில் தனியார் கல்வி நிறுவங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானம்!

யாழ் மாவட்டத்தில் இயங்கிவரும் தனியார் கல்வி நிறுவனங்கள் தொடர்பான விபரங்களைச் சேகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற சிறுவர் அபிவிருத்தி குழுக் கூட்டத்திலேயே இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய சேகரிக்கப்படும் விபரங்களை அடிப்படையாகக் கொண்டு தனியார் கல்வி நிறுவனங்களுக்கான பொறிமுறை மற்றும் கட்டுப்பாடுகளை வகுக்க தீர்மானிக்கப்பட்டது.

யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிறுவர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக ஆராயப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.    

Previous articleயாழில் விபத்துக்குள்ளான இளைஞர் மரணம்!
Next articleஇன்றைய ராசிபலன் 10.08.2023