இரண்டு பதக்கங்களை சுவீகரித்தது இலங்கை!

பொதுநலவாய இளையோர் விளையாட்டுப் போட்டியில் இலங்கையின் அயோமல் அகலங்க மற்றும் நிலுபுல் ஆகியோர் வெள்ளிப் பதக்கத்தையும் வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளனர்.

இவர்கள் ஆண்களுக்கான 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம் மற்றும் உயரம் பாய்தல் ஆகிய போட்டிகளிலேயே இந்த பதக்கங்களை வென்றுள்ளனர்.

இன்று (10) காலை Trinidad and Tobagoவில் நடைபெற்ற பொதுநலவாய இளையோர் விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான 400 மீற்றர் தடை தாண்டும் ஓட்டப் போட்டியின் இறுதிப்போட்டியில் அம்பகமுவ மத்திய மஹா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 17 வயதான அயோமல் அகலங்க கலந்து கொண்டார்.

இதில் ஆண்களுக்கான 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் அயோமல் அகலங்க வெள்ளிப் பதக்கம் வென்றார்.

போட்டியை முடிக்க அவர் எடுத்துக்கொண்ட நேரம் 51.61 வினாடிகள் ஆகும்.

400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் ஜமைக்கா தங்கப் பதக்கத்தையும், இங்கிலாந்து வெண்கலப் பதக்கத்தையும் வென்றன.

இதேவேளை, பொதுநலவாய இளையோர் விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான உயரம் பாய்தல் போட்டியில் நிலுபுல் பெஹசர வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.

இந்த போட்டியில் நிலுபுல்  2.00 மீற்றர் உயரம் பாய்ந்துள்ளார்.

இந்த போட்டியில் கலந்து கொண்ட லெசந்து அர்தவிது 1.95 மீற்றர் உயரம் பாய்ந்து நான்காவது இடத்தைப் பெற்றார்.

உயரம் பாய்தல் போட்டியில் இங்கிலாந்து தங்கப் பதக்கத்தையும், Trinidad and Tobago வெள்ளிப் பதக்கத்தையும் வென்றன.

Previous articleபிரமிட் திட்டங்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!
Next articleஇலங்கை வந்த ரஷ்ய தம்பதியினருக்கு நிகழந்த சோகம்!