கனடாவில் நாய் வளர்ப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

கனடாவில் செல்லப் பிராணிகளை குறிப்பாக நாய்களை வளர்ப்போருக்கு ஓர் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

நாய்களை கட்டி வளர்க்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

சிறுவர்கள், பாதசாரிகள் மற்றும் சைக்கிள் ஓட்டிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை நாய்கள் கடிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

நாய்கடி சம்பவங்கள் அண்மைக் காலமாக டொரன்டோவில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனவே நாய்களை வளர்க்கும் நபர்கள் அவற்றை கட்டி வளர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாய்களை கட்டுப்படுத்தி வளர்ப்பது அதன் உரிமையாளர்களின் பொறுப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு டொரன்டோவில் 1316 நாய் கடி சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

Previous articleமாணவர்களை கடத்தும் வெள்ளைவான் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
Next articleகுழந்தையின் அழுகையை நிறுத்த மதுபானம் கொடுத்த பெண்!