வெள்ளவத்தையில் 8 ஆவது மாடியிலிருந்து வீழ்ந்து இளைஞர் பலி!

வெள்ளவத்தை பிரெட்ரிக்கா வீதியிலுள்ள கட்டிடம் ஒன்றிலிருந்து வீழந்து  24 வயதுடைய  இளைஞர்  ஒருவர் நேற்று வியாழக்கிழமை (10)  உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞர்  வியாழக்கிழமை  குறித்த கட்டடத்தின்  8 ஆவது மாடியிலிருந்து  தவறி வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர் களுபோவில கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் வெள்ளவத்தை பிரெட்ரிக்கா வீதியில் வசிக்கும் 24 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleபோலியான ஆவணம் தயாரித்தவரை சட்டத்தரணி பட்டியலிலிருந்து நீக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
Next articleயாழில் விபரித முடிவால் உயிரிழந்த இளம் குடும்பஸ்தர்!