சைக்கிள் ஓட்டப் போட்டியில் ஈடுபட்ட மாணவன் உயிரிழப்பு!

கொழும்பு – குருணாகல் வீதியின் வால்பிட்ட பகுதியில் கசைக்கிளோட்டப் பயிற்சியில் ஈடுபட்ட பாடசாலை மாணவர் ஒருவர் பஸ் மோதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (10.08.2023) இடம்பெற்றுள்ளது. சைக்கிளோட்டப் போட்டியில் பங்குபற்றும் நோக்குடன் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது எதிரே வந்த பஸ் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தின் போது பலத்த காயமடைந்த பாடசாலை மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார்  தெரிவித்தனர் .

மினுவாங்கொட ஹீனஹிட்டியான பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயதுடைய பாடசாலை மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Previous articleமின் வெட்டு தொடர்பான அறிவிப்பு!
Next articleநிதி மோசடியில் ஈடுபட்ட நபர் கைது!