நிதி மோசடியில் ஈடுபட்ட நபர் கைது!

 அம்பாந்தோட்டை துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களை விடுவிப்பதாக கூறி பெண்ணொருவர் உள்ளிட்ட மூவரிடம் நபர் ஒருவர் 6,271,000 ரூபா பண மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட மூவரால் கொழும்பு நிதி குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டது.

நிதி குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடு

அதற்கமைவாக குறித்த சந்தேகநபர் அதிகாரிகளால் நேற்று வியாழக்கிழமை(10.08.2023) குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் மூலம் பாதிக்கப்பட்ட மூவர் கொழும்பு நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் செய்யப்பட்ட முறைப்பாடுகளுக்கேற்ப சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Previous articleசைக்கிள் ஓட்டப் போட்டியில் ஈடுபட்ட மாணவன் உயிரிழப்பு!
Next articleகொழும்பு நகர மண்டபத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு