சிறுவன் மீது கதவு விழுந்ததில் சிறுவன் வைத்தியசாலையில் அனுமதி!

கிண்ணியாவில் கதவு (Gate) சிறுவன் மீது விழுந்ததில் சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியாற்றுமுனை பள்ளிவாசலில் பொருத்தப்பட்டிருந்த கதவே இவ்வாறு விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு அச் சிறுவன் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேட் மேல் ஏறி சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது கேட் சிறுவன் மேல் விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலையில் அனுமதி

கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு படுகாயம் அடைந்த சிறுவன் அதே பகுதியை சேர்ந்த அலி அமது என்பவருடைய மகன் பாத்திஹ் (11வயது) எனவும் தெரிய வந்துள்ளது.

அச் சிறுவனின் தலையில் இரத்த கசிவு ஏற்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார்.

இருந்த போதிலும் குறித்த சிறுவன் அதி தீவிர சிகிச்சை பிரிவில் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிய வருகின்றது.

Previous articleமின்னல் தாக்கியதில் மூவர் உயிரிழப்பு!
Next articleதூக்கில் தொங்கிய மாணவி சடலமாக மீட்பு!